இந்தியா, ஏப்ரல் 30 -- மலச்சிக்கல் உடலில் பலச்சிக்கலை ஏற்படுத்தும். உங்களால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மேல் மலம் கழிக்க முடியவில்லையென்றால், நீங்கள் உடனடியாக வீட்டிலிருந்து பெறக்கூடிய தீர்வுகளை கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும். மலச்சிக்கல் பிரச்னை குறித்து பாலிவுட்டில் ஒரு சினிமாவே வந்துள்ளது.

அந்தளவுக்கு இது உலகளவில் பலர் எதிர்கொள்ளும் பிரச்னைதான். இதை தீர்க்க நீங்கள் வீட்டிலிருந்தே சிலவற்றை முயற்சிசெய்யலாம்.

மலச்சிக்கல் பிரச்னைகள் இருந்தால் உடலில் பலச்சிக்கல்கள் ஏற்பட்டுவிடும். அவற்றை போக்க இந்த இயற்கை முறைகளை கடைபிடியுங்கள். மலச்சிக்கலை போக்குவது அத்தனை சுலபம் கிடையாது. எனவே கவனமாக சில தீர்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.

நமது உணவுப்பழக்கவழக்கங்கள், குடல் செயல்பாடு, மரபணுக்கள் காரணம், சமூகநிலை, அன்றாட பழக்கங்கள், உடல் மற்றும் மருந்துக...