இந்தியா, அக்டோபர் 19 -- புதுதில்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பிறகு திங்கட்கிழமை (அக்.17) நடைபெற்றது. 137 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் வரலாற்றில் தேசியத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற 6-வது தேர்தல் இதுவாகும். இதில், மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் சுமார் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு முடிந்தத...