கோவை. கோயம்புத்தூர்,குனியாமுத்தூர், ஏப்ரல் 8 -- Coimbatore: கோவை குனியமுத்தூரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நான்கு பேரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து விழுந்தது.

மேலும் படிக்க | பங்குனி உத்திரத்திருவிழா எதிரொலி: வத்தலக்குண்டு மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விலை ஏற்றம் - விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குனியமுத்தூர் போலிசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை ...