இந்தியா, பிப்ரவரி 12 -- வீட்டில் ஏதேனும் சமையல் செய்யும்போது அதனுடன் சேர்த்து சாப்பிடுவதற்கும், மேலும் பல விதமான உணவுகளுக்கும் சிறந்த சைடிஷ் ஆகவும் இருப்பது ஊறுகாய் தான். ஊறுகாய் சாப்பிடுவதால் அனைத்து விதமான சாப்பாடுகளும் எளிமையாக தீர்ந்து விடும். சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பவர்கள் கூட சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி வெறும் ஊறுகாயை மட்டுமே வைத்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ஊறுகாய் உணவை எளிமையாக நமக்கு அதிக சுவையுடன் கொடுக்கும். இந்த ஊறுகாயை வெளியே கடைகளில் வாங்கலாம். ஆனால் சில சமயங்களில் ஊறுகாய்கள் செய்வது மிகவும் சுகாதாரமற்ற செயல்முறையாக இருப்பதை நம்மால் காண முடிகிறது. எனவே வீட்டிலேயே ஊறுகாய் செய்யும் போது அதன் சுகாதாரமும் சுவையும் அதிகரிக்கும், வீட்டில் ஊறுகாய் செய்வது சிலருக்கு தெரியாத காரியம் ஆகும், எனவே அவர்களுக்காகவே நார்த்தங்க...