இந்தியா, பிப்ரவரி 12 -- Chiranjeevi: நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் மற்றும் அவரது மகன் ராஜா கௌதம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் பிரம்மா ஆனந்தம். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது தான் சர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ராம் சரணின் மகள் கிளிங்கராவின் படத்தை தொகுப்பாளர் சுமா சிரஞ்சீவிக்கு காட்டினார். சிரஞ்சீவி மற்ற பேரக்குழந்தைகளுடன் இருக்கும் படத்தை திரையில் காட்டினார். இந்தப் புகைப்படத்தை பார்த்தால் என்ன சொல்ல தோன்றுகிறது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிரஞ்சீவி, வீட்டில் இருக்கும்போதெல்லாம் பேரக்குழந்தைகளுடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படாமல் லேடீஸ் ஹாஸ்டலில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்றார். சுற்றி பெண்களாக இருக்க...