இந்தியா, பிப்ரவரி 10 -- தமிழ்நாட்டில் பெரும்பாலான பிரபலமான உணவுகள் இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பிரபலமான ஒரு உணவு வகையில் முக்கியமான ஒரு உணவு தான் பரோட்டா. பரோட்டா என்றால் பலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்து வருகிறது. பரோட்டா சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என பலர் கூறியிருந்தாலும் இன்றளவும் பரோட்டா மீதான விருப்பமும் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் பரோட்டாவிற்கு தென் மாவட்டங்களில் போடப்படும் ஒரு குழம்பு வகை தான் சால்னா. இந்த சால்னா அனைத்து மாவட்டங்களிலும் கிடைப்பதில்லை. ஒரு சில மாவட்டங்களில் பரோட்டாவிற்கு சட்னி, சாம்பார் போன்றவற்றை வழங்குகின்றனர். இந்த சால்னா செய்வது மிகவும் எளிய விஷயமாகும். பரோட்டாவிற்கு சால்னா சாப்பிட்டால் மிகவும் ருசியானதாகவும் இருக்கும். உங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் சிக்கன் சால்னா...