இந்தியா, பிப்ரவரி 5 -- ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது விதமான உணவு வகைகள் சந்தைகளில் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் சில மட்டுமே நமது உடலுக்கு நன்மை பயக்கின்றன. பலவற்றை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கலாம் என மருத்துவர்களும் கூறுகின்றனர். ஆனால் புரத சத்துக்கான எளிய மூலப்பொருள் என்றால் அது சிக்கன் தான். சிக்கன் உடலுக்கு சூடு என்ற வதந்தி இன்றும் பரவி வருகிறது. ஆனாலும் சிக்கனில் உள்ள நன்மைகளால் நாம் இது வரை பயன்படுத்தி வருகிறோம். நம்மில் சிலர் ரோட்டுக் கடைகளில் எண்ணெய்களில் பொரிக்கப்படும் சிக்கனை வாங்கி சாப்பிடுகின்றனர். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் அதிக எண்ணெய் இருக்கும் ஒரு உணவாகும். அதிலும் வெளியில் செய்யப்படும் சிக்கனில் ஒரே எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். எனவவே வீட்டிலே நாமே இந்த சிக்கன் பக்கோடாவை செய்து சாப்பிட்டால்...