இந்தியா, பிப்ரவரி 13 -- உடலுக்குத் தேவையான புரதத்தை பல வகையான உணவுகள் நமக்கு கொடுக்கின்றன. இதனை தொடர்ந்து சரிவிகிதத்தில் சாப்பிடுவதே சிறந்த ஆரோக்கிய நடவடிக்கை ஆகும். இறைச்சிகளில் அதிகமான அளவு புரதம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நம்மால் எல்லா வகையான இறைச்சிகளையும் சாப்பிட முடிவதில்லை. எல்லாருக்கும் எளிதாக கிடைக்க கூடிய ஒரு இறைச்சி என்றால் அது சிக்கன் தான். உலகின் பல மூலைகளிலும் சிக்கனை வைத்து அசத்தலான சமையல் செய்கின்றனர். இங்கு சிக்கன் வறுவலை எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

அரை கிலோ சிக்கன்

4 பெரிய வெங்காயம்

2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

1 பச்சை மிளகாய்

1 தக்காளி

11 உருளைக்கிழங்கு

1 டீஸ்பூன் மல்லித்தூள்

2 டீஸ்பூன் தனி மிளகாய் தூள்

1 டீஸ்பூன் கரம் மசாலத்தூள்

1 டீஸ்பூன் பொடித்த மிளகு

அரை டீஸ்பூன் மஞ்சள...