இந்தியா, பிப்ரவரி 1 -- சிக்கன் அங்காரா என்பதை வட இந்திய ரெஸ்டாரன்ட்களில் நீங்கள் அதிகம் சாப்பிட்டு இருக்கலாம். அங்கு பரிமாறப்படும் உணவுகளுள் முக்கியமான ஒன்று. இதில் அதிகம் நீங்கள் செய்யக்கூடிய வேலையே சிக்கனை மேரியனேட் செய்ய வேண்டியதுதான். இதை நீங்கள் மேரியனேட் செய்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது எடுத்து, செய்துகொள்ளலாம். உங்களுக்கு காலையில் இந்த உணவு வேண்டுமென்றால், முதல் நாள் இரவே நீங்கள் இதை மேரியனேட் செய்து ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் எடுத்து செய்ய எளிமையாக இருக்கும்.

* பட்டை - 1

* கிராம்பு - 4

* ஸ்டார் சோம்பு - 1

* ஏலக்காய் - 1

* ஜாவித்ரி - அரை

* வர மல்லி விதைகள் - அரை ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* முந்திரி - 5

* பாதாம் - 5

* மிளகு - அரை ஸ்பூன்

* வர மிளகாய் - 1 முதல் 3 வரை (உங்கள்...