இந்தியா, ஜனவரி 26 -- Chhi Chhi Chhi Re Nani என்கிற ஒடியா பாடல் தான், இப்போது எல்லா சமூக வலைதளங்களையும் ஆக்கிரமித்திருக்கிறது. இதில் கூடுதல் விசேசம் என்னவென்றால், இன்று ரீலிஸ் போட்டு, அந்த பாடலை கொண்டாடிக் கொண்டிருக்கும் பலருக்கும், அந்த பாடலின் வரிகளின் அர்த்தம் தெரியவில்லை. காதலில் தோல்வி அடைந்த ஒரு இளைஞனின் வலியை உணர்த்தும் பாடல் என்பது தான் அனைவரும் புரிந்த ஒரே விசயம்.

80களில் தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த ஒரு கன்டண்ட் என்றாலும், இந்த பாடலின் சூழலும், அதில் நடித்தவர்களின் பாவனையும், பாடலின் புரியாத வரிகளும் தான் 2K கிட்ஸ்களை கொண்டாட வைத்துள்ளது. சரி, உண்மையில் இந்த பாடலின் வரிகள் தான் என்ன? தேடிப்பிடித்து ஒருவழியாக, அதை உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் புரிந்து கொண்டது சரி தான், காதலின் வலி தான், இந்த வரிகள். இதோ 'நானிக்கு...