இந்தியா, மார்ச் 22 -- ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் 20.03.2025 முதல் 22.03.2025 வரை நடைபெற்ற தேசிய செஸ் (ராபிட்) போட்டியில் தமிழக வீரர் கிராண்ட்மாஸ்டர் ப.இனியன் தங்கம் வென்றார்.

11GM, 24 IM உட்பட 308 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 7 சுற்றுகளில் வெற்றி, 4 டிரா என 9 புள்ளிகளுடன் கிராண்ட்மாஸ்டர் இனியன் முதல் இடத்தை சமன் செய்தார்.

மற்றொரு தமிழக வீரர் GM பிரனேஷ், ரயில்வே வீரர்கள் GM ஷ்யாம் நிகில், GM திப்தயான் கோஷ் ஆகியோர் 9 புள்ளிகள் பெற்றனர்.

அதனை தொடர்ந்து டை பிரேக் முறையில் தமிழக வீரர் GM இனியன் முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். GM பிரனேஷ் வெள்ளி மற்றும் GM ஷ்யாம் நிகில் வெண்கலமும் வென்றனர்.

மேலும் படிக்க | George Foreman Dies: அமெரிக்காவின் ஹெவிவெயிட் குத்துச்சண்டை லெஜண்ட் ஜார்ஜ் ஃபோர்ம...