இந்தியா, பிப்ரவரி 22 -- சரத்குமாரின் முன்னாள் மனைவியான சாயா சரத்குமார் விவாகரத்து குறித்து கடந்த ஆண்டு அவள் கிளிட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டி இங்கே!

அவர் பேசும் போது, "திருமணம் செய்து கொள்வதற்கு இதுதான் வயது என்று எதையும் சொல்வதற்கில்லை. உண்மையில் திருமணம் செய்து கொள்வதற்கு முதலில் நாம் மனதளவில் தயாராக வேண்டும். பெரும்பான்மையான மக்கள் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நீங்கள் திருமணம் செய்து கொள்வது சரியான காரணங்களுக்காக இருக்க வேண்டும். எமோஷனலாகவும், மனதளவிலும், உடலளவிலும் நீங்கள் தேர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

திருமணம் என்பது ஒரு நாள் கூத்து அல்ல. கல்யாணம் என்பது ஒரு பயணம். பயணத்தில் நீங்கள் சரிவர பயணம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் அனைத்து தளங்களிலும் கொஞ்சம் தேர்ந்த நிலையை அடைந்திருக்க வேண்டும்....