இந்தியா, மே 15 -- எஸ்.ஹெச்.டி மசாலா நிறுவனத்தின் நிறுவனர் ஷ்யாம் ப்ரேம் வலைதளங்களில் தனது பல்வேறு சமையல் குறிப்புகள் மற்றும் ரெசிபிகளையும் பகிர்ந்து வருகிறார். அவர் ஹெச்.டி தமிழுக்கு அளித்த பேட்டியில் சிலோன் ஸ்டைலில் தேங்காய்ப்பூ சம்பல் செய்வது எப்படி என்று பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இதை அடுப்பு இல்லாமல் நாம் எளிதாக 10 நிமிடங்களில் பட்டென்று செய்து முடித்துவிட முடியும். மேலும் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியும் என்று தெரிவித்தார்.

உங்களுக்கு டிபஃன் செய்துவிட்டு, சட்னி அல்லது சாம்பார் செய்ய பிடிக்காமல் இருக்கும்போது அல்லது டிபஃனுக்கு வித்யாசமாக சைட் டிஷ் வேண்டும் என்று நினைக்கும்போதும் அல்லது ஒரே மாதிரி சட்னி, சாம்பார் மட்டுமே செய்து சாப்பிட்டு போர் அடிக்...