இந்தியா, ஏப்ரல் 30 -- உலகம் முழுவதிலும் பெண்களை பாதிக்கும் பிரச்னைகளுள் கருப்பை வாய் புற்றுநோய் மிக முக்கியமானது. ஆனால் நீங்கள் அதன் அறிகுறிகளை முன்னரே கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கு தேவையான சிகிச்சையைக்கொடுத்து பலன்பெறலாம்.

இதற்கு ஹெச்பிவி என்ற தடுப்பூசி போடப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவம் கடும் துர்நாற்றம் வீசுவதாக இருக்கும். உங்கள் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தில் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக நீங்கள் கவனிக்கவேண்டும். தொடர்ந்து மாற்றங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர் இடுப்பு வலி, குறிப்பாக உடலுறவின்போது வலி ஏற்பட்டால், மாதவிடாயின்போது மாறுபட்ட வலி ஆகியவை இரு...