இந்தியா, பிப்ரவரி 9 -- CCL 2025: திரைநட்சத்திரங்களுக்கு இடையே நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியானது, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்று அழைப்படுகிறது. இந்த லீக்கின் 11 வது சீசன் தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்கால் டைகர்ஸ் அணியும், சென்னை ரைனோஸ் அணியும் மோதின.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்தப்போட்டியில், டாஸ் வென்ற பெங்கால் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அவர்களது அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஜாமியும், பானியும் ஓப்பனர்களாக களமிறங்கினர். அமித் மற்றும் சென்னை அணியின் சிறப்பான ஃபீல்டிங்கால் பெங்கால் அணி திணறியது. சிறிது நேரத்தில் அந்த அணியில் இருந்து 2 விக்கெட்டுகள் பறிபோனது.

6 ஓவர்கள் முடிவில் 3 பேர் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, ராகுலை பறிகொடுத்து நின்றது. துர்திஷ்டவசமாக, ஜாமியும் அடுத்ததா...