இந்தியா, பிப்ரவரி 15 -- மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2024-25 கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று (பிப்ரவரி 15- சனிக்கிழமை) தொடங்குகின்றன. இதில் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் இந்தியா முழுவதும் 7,842 மையங்களிலும், உலகெங்கிலும் 26 நாடுகளிலும் நடக்கிறது. ஏறத்தாழ 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வினை எழுதி வருகின்றனர். இதில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 24 லட்சத்து 12 ஆயிரத்து 072 மாணவர்கள் 84 பாட பிரிவுகளில் தேர்வு எழுதுகிறார்கள், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 120 பாடங்களில் 17 லட்சத்து 88 ஆயிரம் 165 பேர் தேர்வு எழுதுகிறார்கள் என்று சிபிஎஸ்இ பகிர்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

2025 ஆம் ஆண்டில் ...