இந்தியா, பிப்ரவரி 13 -- வீட்டில் சமையல் செய்வது என்பது மிகவும் நுணுக்கமான செயலாகும் . ஒரு சிலர் சமையலை எளிதாக நினைத்து விடுகிறார்கள். ஆனால் சமையல் செய்பவர்களுக்கு தான் அந்த சிக்கல்கள் தெரியும். தினமும் வித்தியாசமாக சமைக்க வேண்டும். ஒரே மாதிரியான உணவுகளை செய்து தரும் போது சாப்பிடுபவர்களுக்கு சலிப்பு உண்டாகும். எனவே சற்று மாறுபட்ட சுவை கொண்ட உணவுகளை செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். நம் வீட்டில் சாதத்திற்கு தனியாக குழம்பு, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு தனியாக குழம்பு என வைப்பது வழக்கம். ஆனால் இனி இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. இந்த ஒரு குருமா இருந்தால் போதும். சாதம், தோசை, இட்லி மற்றும் சப்பாத்தி உட்பட பல வகையான உணவுகளுக்கு வைத்து சாப்பிடுமாறு சுவையான காலிபிளவர் குருமா செய்யலாம். காலிபிளவர் குருமா செய்வது எப்படி என்பதை இங்கு காண்...