இந்தியா, பிப்ரவரி 20 -- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றாடம் ஏதேனும் சில காய்கறிகளை தங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உடலின் ஆரோக்கியம் பாராமரிக்கப்படும். மேலும் உணவியல் நிபுணர்களும் இதையே பரிந்துரை செய்கின்றனர். இந்த நிலையில் சில குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதில்லை. அதிலும் மதிய உணவு காய்கறிகளோடு இருந்தால் அவை மீதமாகிறது. அதனை தடுக்கவும், வேகமாக லஞ்ச் பாக்ஸ்க்கு ஒரு சூப்பர் ரெசிபி செய்யவும் வேண்டுமா? அதுக்கு தான் இருக்கே கேரட் சாதம். சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டுமே ஒரு சேர இதில் உள்ளது. அதிலும் குறிப்பாக கேரட் சாதம் செய்ய குறைவான நேரமே செலவாகும். சுவையான கேரட் சாதம் எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

கால் கிலோ கேரட்

4 கப் சாதம்

10 முந்திரி

3 கிராம்பு

2 பட்டை

3 பச்சை மிளகாய்

2 ஏலக்...