இந்தியா, மார்ச் 13 -- குழந்தைகளுக்கு முதலில் கேரட் கொடுப்பது ஒரு சத்தான உணவு. இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. அதனால் உடலில் அது வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.

வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும் செய்கிறது. கேரட்டில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. அவை குழந்தைகளின் சாதாரண குடல் இயக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

தாங்களாகவே உட்கார முடிந்தவுடன்

உங்கள் குழந்தை திட உணவுகளை தொடங்குவதற்கு முன் குறைந்தபட்சமாக அவர்களால் உட்கார முடியுமா? என்று பார்க்க வேண்டும்.

உணவை குழந்தைகள் பாதுகாப்பாக விழுங்குவதற்கு, தலையை நிலையாக நிமிர்ந்தும் வைத்திருக்கும் திறன் மிக முக்கியமானது. உங்கள் குழந்தை 6 மாதங்களில் உட்கார்ந்து தலையை உயர்த்திப் பிடிக்க முடியாவிட்டால், கழுத்து தசைகளை வலுவட...