இந்தியா, செப்டம்பர் 27 -- பக்கோடா என்றாலே வெங்காய பக்கோடா அல்லது முந்திரி பக்கோடாதான் நம் நினைவில் வரும். மழை வந்துவிட்டாலே சூடாக பக்கோடா சாப்பிடுவது சுகமாக அனுபவமாக இருக்கும். அதை பெரும்பாலானோர் விரும்புவர். ஏனெனில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நிமிடத்தில் தயாரித்து விடலாம் என்பதால், மழையும், பக்கோடாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த நமது உணர்வுடன் கலந்த விஷங்கள் ஆகும்.

வெங்காயம், முந்திரி பக்கோடாக்கள் மட்டுமே சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்காகவே முட்டைகோஸ் பக்கோடா செய்வது எப்படி என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையை முட்டைகோஸ் பக்கோடாவுடன் சேர்த்து கொண்டாடுங்கள்.

முட்டைக்கோஸ் - ஒரு கப்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஓமம்- ஒரு ஸ்பூன்

கடலை மாவு - 2 கப்

எண்ணெய் - பக்கோடக்களை பொரித்து எ...