இந்தியா, ஜனவரி 28 -- தினமும் குறைந்தது 2 வகையான காய்கறிகளையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாமும் நமது உடல் நலனை பராமரிப்பதற்கு காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம் வீட்டில் உள்ள குழந்தைகள் உணவில் சேர்க்கப்படும் காய்கறிகளை முழுதாக சாப்பிடுவதில்லை. மேலும் நாம் தயாரித்து தரும் பொரியல், அவியல் போன்றவைகளில் உள்ள காய்கறிகளையும் சாப்பிடுவதில்லை. அதற்கு காரணம் அதன் சுவை அவர்கள் விரும்பும் படியாக இருப்பதில்லை. எனவே குழந்தைகள் விரும்பும் படி புதுவிதமாக காய்கறிகளை சமைத்துக் கொடுத்தால் மட்டுமே அவர்களது உடலில் காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

முட்டைக்கோஸ் என்பது நமது வீட்டில் அன்றாடம் பலமுறை செய்யும் ஒரு காய்கறி ஆகும். வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றாலும் கல்யாண வீடுகளி...