இந்தியா, பிப்ரவரி 12 -- C. V. Shanmugam : குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் எனவும், தேர்தல் ஆணையம் இரண்டு தவறுகளை செய்துள்ளது எனவும் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், "இல்லாத அதிகாரத்தை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. அதிமுக கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. ...