இந்தியா, பிப்ரவரி 6 -- வீட்டில் எப்போதும் ஒரே மாதிரி சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு சலித்து விட்டதா. இந்த மாதிரி ஒரு குருமா வச்சு பாருங்க காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு சப்பாத்தி என எல்லாத்துக்கும் இந்த ஒரு குருமா போதும். ருசி அசத்தலாக இருக்கும். பட்டர் பீன்ஸில் புரதச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளதால் ஆரோக்கியத்திற்கும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

முதலில் தோல் நீக்கிய பட்டர் பீன்ஸை சுத்தம் செய்து குக்கரில் சேர்க்க வேண்டும். அதில் இரண்டு உருளைக்கிழங்கையும் சேர்த்து 2 விசில் வைத்து எடுத்து கொள்ள வேண்டும். வெந்த உருளை கிழங்கை தோல் நீக்கி தேவையான அளவில் நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.

மிக்ஸ் ஜாரில் தேங்காய் துருவல் கசகசா, 1/2 ஸ்பூன் சோம்பு, 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து...