இந்தியா, பிப்ரவரி 1 -- நாடாளுமன்றத்தில் 2025 -2026 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் மீண்டும் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தமிழக வெற்றிக் கழக கூறப்பட்டுள்ளதாவது,

"2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத...