இந்தியா, பிப்ரவரி 1 -- நாடாளுமன்ற மக்களவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் உரையாற்றி செய்து வருகிறார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், பின்னர் மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இன்று காலை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். பின்னர் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியை செய்து வருகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளை...