இந்தியா, பிப்ரவரி 2 -- ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிற 2025- 26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு ஆளும் பாஜக அரசு செய்திருக்கிற பச்சைத்துரோகமாகும். மேலும், பாஜகவின் கூட்டணி ஆளுகிற பீகார் போன்ற மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவு சிறப்புத்திட்டங்களை வாரி வழங்கியுள்ள நிதிநிலை அறிக்கை , தமிழ்நாட்டுக்கு எந்த சிறப்புத்திட்டத்தையும் அறிவிக்காமல் புறக்கணித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பாதுகாப்புத்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கிவிட்டு, ஊரக வேலை...