இந்தியா, ஜனவரி 31 -- ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியை பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரை உடன் இன்று தொடங்கி உள்ளது. நாளை காலை 11மணிக்கு மக்களவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மகாலட்சுமி தொடர்ந்து ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது மிகவும் பெருமைக்குரியது. உலக பீடத்தில் இந்தியா தன்னை நன்கு நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எனது மூன்றாவது ஆட்சியின் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். 2047ல், இந்தியா...