இந்தியா, பிப்ரவரி 1 -- Budget 2025: மக்களவையில் குறைந்த பெரும்பான்மையுடன் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்து உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொருளாதார வளர்ச்சிக்கு வீரியம் சேர்க்கவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வரும் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். தேர்தல் உள்ளிட்ட அரசியல் நெருக்கடிகள் தற்போது ஏதும் இல்லாததால், அதிக சீர்த்திருத்தங்களை கொண்ட பட்ஜெட்டாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) பெயரளவு அடிப்படையில் மதிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் நிதிப் பற்றாக்குறை போன்ற முக்கிய நிதி குறிகாட்டிகள் வெளிப்படுத்தப...