இந்தியா, பிப்ரவரி 1 -- மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் பிற அதிகாரிகளுடன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், பின்னர் மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

பட்ஜெட் தாக்களுக்கு முந்தைய அமைச்சரவை கூட்டம் பிரதமர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும், அதன் பிறகு நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பங்...