New Delhi, பிப்ரவரி 1 -- திருமணம் ஆன தம்பதிகளுக்கு கூட்டு வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) பரிந்துரை செய்து உள்ளது.

இன்றைய தினம் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இதுவரை 6 முழு பட்ஜெட் மற்றும் 2 இடைக்கால பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்து உள்ளார்.

பட்ஜெட் உரையின் போது, வரவிருக்கும் நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் வருவாய் எதிர்பார்ப்புகளை நிர்மலா சீதாராமன் மக்களவையில் கோடிட்டுக் காட்டுவார். கீழ்சபையில் பட்ஜெட் உரை நடந்து முடிந்த பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்...