இந்தியா, பிப்ரவரி 1 -- நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தொடங்கும் முன் தெலுங்கு கவிஞரும், நாடக ஆசிரியருமான குருஜாதா அப்பா ராவ் கூறிய வாக்கியமான, "தேசமந்தே மட்டி காடோய், தேசமந்தே மனுஷுலோய்" என சொல்லி நிதியமைச்சர் தொடங்கினார்.

அதாவது "நாடு என்பது மண்ணை மட்டும் குறிப்பது அல்ல. மக்களையே குறிக்கும்" என்பது தான் அதன் பொருள். இதன் அடிப்படையில் நம்து வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் பட்ஜெட் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெற்றுச் சொல் அலங்...