இந்தியா, பிப்ரவரி 1 -- வரும் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01-02-2025) மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றைய தினம் (31-01-2025) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை உடன் தொடங்கியது. நேற்று பிற்பகலில் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையையும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்து வரும் 2025-26ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என்று கணித்துள்ளது. 2047ஆம் ஆண்டுக்குள் 'வளர்ச்சி அடைந்த இந்தியா' என்ற இலக்கை அடைய தேவைப்படும் ஆண்டுக்கு 8 % ஜிடிபி இலக்கை எட்ட வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்றைய தினம் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 8வது முறையாக நிர...