இந்தியா, மார்ச் 11 -- நமது வீடுகளில் காலை வேளை என்பது மிகவும் பரபரப்பான சமயமாகும். ஏனென்றால் இந்த சமயத்தில் தான் காலை உணவிற்கு தயார் செய்து கொண்டிருப்பார்கள். மேலும் அதே நேரத்தில் அலுவலகத்திற்கு செல்பவர்களுக்காகவும், பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்காகவும் மதிய உணவையும் தயார் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் தாமதமாக எழுந்ததனால் மதிய உணவு செய்வதற்கு நேரம் போதாமல் இருக்கலாம். அது போன்ற நேரங்களில் நாம் ஏதேனும் எளிமையாக செய்யக்கூடிய வெரைட்டி ரைஸ் செய்தால் மிகவும் சுலபமாக இருக்கும். அப்படி உங்களது அவசரமான காலை நேரத்தை எளிதாக்குவதற்கும் மதிய உணவை சுவையானதாக மாற்றுவதற்காகவும் சிறந்த ஒரு தேர்வு தான் பிரிஞ்சி சாதம், பிரிஞ்சி சாதம் செய்வதற்கு குறைந்த நேரமே போதுமானது. மேலும் இது மிகவும் சுவையாகவும் இருக்கும் பிரிஞ்சி சாதம் செய்வது எப...