இந்தியா, பிப்ரவரி 12 -- பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் தொடங்கி அலுவலகங்களுக்கு செல்லும் ஆட்கள் வரை அனைவருக்கும் மதிய உணவு என்பது முக்கியமான ஒன்றாகும். மதிய உணவில் அனைத்து விதமான காய்கறிகளையும் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஏனெனில் அப்போது தான் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். ஆனால் பல காய்கறிகள் சேர்ந்து செய்த குழம்பை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. அதனை தவிர்த்து விடுகின்றனர். எனவே காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையில் மதிய உணவு சமைப்பது சமையல் செய்பவர்களுக்கு பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

தினமும் ஒரே மாதிரியான சமையல் செய்யும்போது அது அனைவருக்கும் சலிப்பை ஏற்படுத்தும். எனவே வித்தியாசமான முறையில் சமையல் செய்வதே அதன் ருசியை கூட்டுவதற்கு பயன்படும். எனவே சூ...