இந்தியா, பிப்ரவரி 23 -- Brindha Sivakumar: கோலிவுட் சினிமாவை அறிந்தவர்களுக்கு நடிகர் சிவக்குமாரையும் அவரது குடும்பத்தையும் தெரியாமல் இரு்ககாது. இவர், 1980-90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தார். பின் மெல்ல மெல்ல துணைக் கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த இவர், பின் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவரைத் தொடர்ந்து இவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்திக் இப்போது, கோலிவுட் நட்சத்திரங்களாக மாறிவிட்டனர். தற்போது சூர்யா பான் இந்தியா ஹீரோவாக வலம் வருகிறார். மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி.

சூர்யாவின் மனைவி ஜோதிகா தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழி படங்களில் நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சூர்யாவின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் திரையுலகத...