இந்தியா, பிப்ரவரி 9 -- இட்லி மாவு இல்லாவிட்டால் சப்பாத்தி, பூரி போன்ற வழக்கமான ப்ரேக் ஃபாஸ்ட்கள் போர் அடிக்கும்போது, நீங்கள் இந்த வித்யாசமான ப்ரேக் ஃபாஸ்டை முயற்சி செய்யலாம். இது குழந்தைகளுக்கு வித்யாசமான சாப்பிடும் அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபியாகும். நாம் பெரும்பாலும் ஒரே மாதிரியான காலை உணவைத்தான் அவர்களுக்கு கொடுக்கிறோம். இது வித்யாசமானதாகவும், அவர்கள் விரும்பும் ஒன்றாகவும் இருக்கும்.

வாழைப்பழம் - 2 (நேந்திரன் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளவேண்டும்)

நாட்டுச்சர்க்கரை - 2 ஸ்பூன்

ஏலக்காய் - 2

உப்பு - ஒரு சிட்டிகை

அரிசி மாவு - ஒரு கப்

தேங்காய் துருவல் - 2 கப்

(துருவிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பால் பிழிந்து அதில் இனிப்புக்காக கொஞ்சம் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு இனிப...