இந்தியா, ஜனவரி 30 -- மாலை நேரம் வந்து விட்டாலே சுட சுட டீயுடன் சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நமது வீட்டில் உள்ளவர்களுக்கு வழக்கமான ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அந்த அளவிற்கு டீயுடன் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது ஒரு நிறைவான உணர்வை கொடுக்கும். ஆனால் இப்பொழுது நமது வீடுகளில் சுவையான ஸ்நாக்ஸ்களை செய்யாமல் கடைகளில் இருந்து வாங்கி சாப்பிட்டு வருகிறோம். ஆனால் அது அந்த அளவிற்கு சிறந்ததாக இருப்பதில்லை. கடைகளில் போடப்படும் ஸ்நாக்ஸ்கள் திரும்பத் திரும்ப ஒரே எண்ணெயில் போடப்பட்டிருக்கலாம் அல்லது சுத்தமான முறையில் தயாரிக்கப்படாமல் இருந்திருக்கலாம். எனவே வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடும் போது மட்டுமே அதன் ருசியும் சுத்தமும் ஒருசேர கிடைக்கும். இந்த நிலையில் நாம் வீட்டிலேயே எளிமையான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்ய முடியும். அதற்கு வீட்டில் உள்ள பிரட் போன்ற சில பொரு...