இந்தியா, பிப்ரவரி 10 -- நமது ஊரில் டீக்கடைகள் இருந்தாலே அங்கு நிச்சயமாக வடை, போண்டா விற்பனையாகி கொண்டிருக்கும். நமக்கு டீ குடித்தால் அதனுடன் சேர்த்து வடை அல்லது போண்டா சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். வீட்டிலேயே கூட ஏதேனும் விசேஷ நிகழ்ச்சி என்றால் அதில் நிச்சயமாக வடை இருக்கும். மேலும் கல்யாணம் போன்ற பல நிகழ்ச்சிகளில் போடப்படும் விருந்துகளில் வடையும், போண்டாவும் இடம் பெற்றிருக்கும். நாம் கடைகளில் சென்று வாங்கும் போண்டா சில சமயம் சுத்தமான எண்ணெய்களில் போடாமல் இருக்கலாம். மேலும் அந்த போண்டா செய்யப்பட்ட மாவு தரமனதாக இல்லாமல் இருக்கலாம். எனவே நாமே வீட்டிலேயே போண்டா செய்து சாப்பிட்டால் அதன் சுவையும் அதிகமாக இருக்கும். சுத்தமான உணவும் உறுதி செய்யப்படும். இனி போண்டா செய்ய சிரமம் படத் தேவையில்லை. பிரட் இருந்தா போதும் சுவையான, சூடான போண்டா...