இந்தியா, பிப்ரவரி 13 -- உலகம் தோன்றியதில் இருந்து பல விதமான பொருட்கள் தோன்றியும், பல அழிந்தும் வருகின்றன. ஆனால் இன்று வரை அழியாமல் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் ஒரு பொருள் இருந்து வருகிறது. அது தான் மனிதன் கண்டுபிடித்த பிளாஸ்டிக், இது கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை இதன் பயன்கள் பல விதத்தில் பயன்பட்டாலும். இதனால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பே ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் மனித மூளையில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனித உடலின் மற்ற உறுப்புகளான கல்லீரல் , சிறுநீரகங்களை விட மூளை திசுக்களில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸின் அளவு 12 மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் பொத...