இந்தியா, பிப்ரவரி 2 -- குளோமெருலோ நெஃப்ரிடிஸ் (Glomerulonephritis) என்பது சிறுநீரகத்தை பாதிக்கும் ஒரு தீவிர நிலை. இது குளோமருலி, அதிகப்படியான திரவம் மற்றும் இரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டுகின்ற சிறிய இரத்த நாளங்களை பாதிக்கிறது. Glomerulo nephritis உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறுதி நிலை சிறுநீரக நோய் (ESKD) ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இதற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது டயாலிசிஸ் தேவைப்படும். சிறுநீரக நோயாளிகளில் 25 முதல் 30 சதவீதம் பேர் இந்த வகை நோயால் பாதிக்கப்படலாம்.

குளோமெருலோ நெஃப்ரிடிஸ் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை குளோமெருலோனெப்ரிடிஸ் சிறுநீரகத்தின் குளோமருலஸில் (குளோமருலஸ் என்பது, சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களில் அமைந்துள்ள நுண்குழாய்களின் சுருள் பந்து) தொடங்கு...