இந்தியா, ஏப்ரல் 9 -- Black Pandi: தமிழ் திரைத்துறையில் காமெடியனாக வலம் வருபவர் 'பிளாக் பாண்டி'. பல்வேறு படங்களில் நடித்திருந்த போதும், அங்காடித் தெரு படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. தற்போது 'இஎம்ஐ' எனும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் தொடர்பாக லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பல்வேறு விஷயங்களை பேசினார்.

மேலும் படிக்க | Anjali: நானும் அஞ்சலியும் ரொம்ப நெருக்கம்.. நடிகர் பிளாக் பாண்டி வருத்தம்

அவர் பேசும் போது, 'திரைத்துறையில் காமெடியனாக வலம் வருவது மிகவும் கடினமான ஒரு விஷயம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என் மீதான பார்வை வேறு மாதிரியாக இருக்க வாய்ப்புண்டு. நான் இங்கிருந்து மதுரைக்கு செல்கிறேன் என்றால், நான் அந்த இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்பட...