இந்தியா, ஜனவரி 27 -- தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் 2019ஆம் ஆண்டு ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத், சாகுல் அமீது ஆகியோரை திண்டுக்கலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

இந்த செய்தியை சுட்டிக்காட்டி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், மதமாற்றத்தை தட்டிக்கேட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த திருபுவனம் ராமலிங்கம் அவர்களை படுகொலை செய்த பயங்கரவாதிகளில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய இருவரை திண்டுக்கல்லில் தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பயங்கரவாதிகளை தேடிக்கண்டுபிடித்து கைது செய்வது தேசிய புலனாய்வு முகமை தானே தவிர தமிழக காவல்துறை அல்ல! இந்நிலையில் தமிழகத்தில் ...