இந்தியா, மார்ச் 4 -- தமிழக பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு மாநிலத்திற்கும் பாஜக தேர்தல் குழு அமைக்கப்படும். அதேபோல், பாஜக வேட்பாளர் பட்டியலை தயாரிக்க தமிழகத்துக்கும் தேர்தல் குழு அமைக்கப்படும். அதில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், தலைவர்கள் பங்கு பெறுவார்கள். அந்தக் குழுவானது உத்தேசப் பட்டியலுடன் வரும் 6 ஆம் தேதி தேசிய தலைமையை சந்திக்க உள்ளது. வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை அடையாளம் காண ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு நிர்வாகிகள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.

நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் குழு கூட்டத்தில் எந்தெந்த மாநிலங்கள் கலந்து கொண்டன என்பதைப் ப...