இந்தியா, ஏப்ரல் 14 -- "வாய்ப்பை தவறவிட்டோம் ஏமாற்றம் ஏதுமில்லை" என பாஜக மாநிலத் தலைவர் குறித்த கேள்விக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

புதிய மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் குறித்து பேசிய வானதி, "திரு. நயினார் நாகேந்திரன் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பங்களித்தவர்" என்று பாராட்டினார். "அவருடைய தலைமை புதிய நபர்களை கட்சிக்கு கொண்டு வரும், புதிய விஷயங்கள் கட்சிக்கு கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"கட்சியின் விரிவாக்கத்திற்கு அவர் பொறுப்பேற்றது ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கிறோம்" என்று தெரிவித்தார். "கோடிக்கணக்கான தொண்டர்கள் அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறார்கள், அவர் எங்களை நல்ல முறையில் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எல்லாருக்கும் இருக்கிறது" என்று...