இந்தியா, ஜனவரி 27 -- தஞ்சாவூரில் பாஜக உட்கட்சித் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று கூறி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜகவில் உட்கட்சித்தேர்தல் மூலம் நிர்வாகிகள் நியமனம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரம் பெற்று உள்ளன. பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக மாவட்ட வாரியாக தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 19ஆம் தேதி அன்று பாஜக சார்பில் முதற்கட்டமாக மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியானது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர்,...