இந்தியா, ஏப்ரல் 11 -- பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவர் ஆக்க அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, கருப்பு முருகானந்தம், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட 10 பேர் முன் மொழிந்து உள்ளனர்.

பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான விருப்பமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், அப்பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனுத்தாக்கல் செய்து உள்ளார். இதனால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.

பாஜக தலைவர் பதவிக்கு 10 ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ள நபர்களே மனுத்தாக்கல் செய்ய முடியும்...