இந்தியா, ஏப்ரல் 11 -- சென்னை மலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குரு மூர்த்தி வீட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகமான கமலாலயத்திற்கு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் வருகை தந்து உள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட இன்று மாலைக்குள் விருப்பமனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கமலாயத்திற்கு வந்த நயினார் நாகேந்திரன் கட்சி அலுவலக வாயிலை தொட்டு கும்பிட்டு உள்ளே என்று உள்ளார். பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் பெயரும் இடம்பெற்று உள்ளதாக கூறப்படும் நிலையில், நயினார் நாகேந்திரன் கட்சி தலைமை அலுவலகத்தில் முகாமிட்டு உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Published by HT Digital Content Ser...