மும்பை,சென்னை,டெல்லி,பெங்களூரூ, மார்ச் 3 -- Bitcoin Price : மார்ச் 2, 2025 ஞாயிற்றுக்கிழமை, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பெரிய அளவிலான கிரிப்டோ ரிசர்வ் அமைக்கப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, முக்கியமான கிரிப்டோகரன்சி பிட்‌காயின் விலை கிட்டத்தட்ட 9 சதவீதம் உயர்ந்து 92,000 டாலராக உயர்ந்துள்ளது.

பிட்‌காயின் விலை, டிரம்ப் அறிவிப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட 9 சதவீதம் உயர்ந்து 92,000 டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு மாலை 8:50 மணிக்கு (IST) 85,166.29 டாலராக இருந்தது என்று Coinmarketcap தரவுகள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் கிரிப்டோ ஸ்ட்ராடெஜிக் ரிசர்வ் அமைப்பதாக அறிவித்ததால் இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் கிரிப்டோ தொழிலை மேம்படுத்த அவர் முயற்சிக்கிறார்.

''பைடன் நிர்வாகத்தின் ஊழல் தாக்குதல்களுக்குப் பி...