இந்தியா, மார்ச் 16 -- தமிழ் சினிமாவில் 1980களில் காமெடி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிந்து கோஷ். இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் தவித்து வந்த பிந்து கோஷ் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 76.

பிந்து கோஷ் காலமாகியிருப்பதை அவரது மகன்கள் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவையொட்டி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, நடிகை பிந்து கோஷுக்கு, வயது முதிர்வு காரணமாக பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், மருத்துவ செலவு மற்றும் சாப்பாட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார். பிபி சுகர் மட்டுமல்லாமல் ஹார்ட் ஆபரேஷன் கூட செய்து இருக்கிறார். தனது மூத்த மகன் தன்னை கவனிக்க முடியாமல் தன்னை விட்டு பெங்களுரு சென்றதாகவும், இளைய மகன் தன்னை கவனித்து வந்தாலும் போதிய பணமின்றி இருப்பத...