இந்தியா, பிப்ரவரி 9 -- Bigg boss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா ஒரு முறை பிங்க் கலரை தொட வேண்டும் என்பதற்காக, அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தீபக் பிங்க் கலர் ஆடையை அணிந்திருந்ததால், அதை தொடும் நோக்கத்தில், தீபக்கை வந்து தொட்டு விட்டுச் சென்றார்.

இதில் டென்ஷனான தீபக், என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி என்னை நீ தொடுவாய் என்று கேட்க, சௌந்தர்யா இது மிகவும் இயல்பான விஷயம், இதற்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள் என்று வாதம் செய்தார். ஆனால், தீபக் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை; என் அனுமதி இல்லாமல் என்னை யாரும் தொடக்கூடாது என்று காட்டமாக கூறினார்.

இந்த விவகாரம், பிக் பாஸ் வீட்டிலும் வெளியிலும் மிகப்பெரிய விவாதமாக மாறியது. ஒரு சிலர் தீபக் செய்தது சரிதான் என்று கூறினாலும், இன்னும் சிலர் சௌந்தர்யாவுக்கு ...